மெய் என்ற சத்தியம்

  1. அசத்தியம் – Unconscious Incompetence (பொய்)
  2. சத்தியம் – Conscious Incompetence (மெய்)
  3. சாத்தியம் – Conscious Competence (செய்)
  4. அசாத்தியம் – Unconscious Competence (வாய்)

பொய் என்பது எனக்கு தெரியாத மெய், தெரிந்த பிறகு அது பொய்யல்ல. இந்த தெரிதல் இங்கே இப்போது (NOW) ஒரு கணப்பொழுதில் நடக்கிறது.

ஒரு கணம் முன்பு தெரியாத விஷயம், இப்போது தெரிந்து விட்டது. இது மனதில் ஏற்படும் மாற்றம். இந்த மாற்றம் உடனே நிகழும் செயல்.

ஆனால் ஒரு கலையை பயில வேண்டுமானால் அது தினமும் பயிற்சி செய்து அந்த தொடர்ந்த பயிற்சியினால் கை கூடுவது.