பிள்ளையார் சுழி என்று எல்லோராலும் அறியப்பட்ட ஒரு குறி தான் இந்த “” என்ற தமிழ் எழுத்து. விநாயகப் பெருமான் எழுத்தோடு தொடர்புடையவர். மகா பாரதம் என்ற பெரும் காவியத்தை வியாசர் பாட விநாயகர் எழுதியதாக சொல்லப்படுகிறது.

எண்ணும் எழுத்தும் கண் எனப்படும்.

எந்த ஒரு மொழியில் எழுதுவதாக இருந்தாலும், அதற்கு வட்டம் (circle) பிறை (arc/spiral) கோடு (line) என்ற மூன்றும் இன்றியமையாதது. இந்த “” என்ற வடிவம் வட்டத்தில் தொடங்கி பிறையாக வளர்ந்து கோடாக பயணிக்கிறது.

எண்கள் சுழியத்தில் (zero) தொடங்கி பெரிய மதிப்புகளாக வளர்ந்து நீண்டு கொண்டே போகின்றது. அதுபோல சுழியில் தொடங்கும் எதுவும் வளர்ந்து நீண்டு பெரும் புகழ் அடையும் என்ற நம்பிக்கையும், சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கும் வழக்கமாக உருவானது.

ஓலைச்சுவடியில் சுழி போட்டு எழுதும் முறை

அந்த காலத்தில் ஓலைச்சுவடியில் எழுதுவது வழக்கம். அந்த ஓலையில் எல்லா எழுத்தையும் எழுத முடியுமா என்று தர பரிசோதனை செய்ய இந்த குறியீடு பயன்பட்டது. இந்த குறியை எழுதும்போது அந்த ஓலை கிழியாமல் இருந்தால் எந்த ஒரு எழுத்தையும் அந்த ஓலையில் எழுத முடியும் ஆதலால், சுழி போட்டு எழுதும் வழக்கம் உருவானது. எந்த ஒரு எழுத்துப்பணியை துவங்குவதற்கு முன்பும் சுழி போட்டு ஓலையின் தரத்தை உறுதி செய்து கொண்டால் பாடலோ, கவிதையோ, கதையோ, ஜாதகமோ, முக்கியமான மருத்துவக் குறிப்புகளோ, ஆவணங்களோ, எதுவாக இருந்தாலும் செவ்வனே எழுதி வைக்க முடியும். அந்த எழுத்து நீண்ட நாட்கள் அழியாமல் உறுதியாக இருக்கும்.

வட்டம் என்பதின் வரைவிலக்கணம்

ஒருபுள்ளியினொழுக்கு (locus of a point) ஒரு நிலையான புள்ளியிலிருந்து சமமான தூரத்தைக் கொண்ட எல்லைகளையுடைய (சுற்றளவு) அனைத்து புள்ளிகளின் சேர்க்கை (locus of all points at the same distance from a single point) ஒரு வட்டமான வடிவம்.

சுழி என்பது தொடக்கத்தை மற்றும் முழுமையை குறிக்கும்

சுழி என்பது முழுமையை (complete) குறிக்கும். வட்டம் என்பது எந்த புள்ளியில் தொடங்கினாலும் அதே புள்ளியில் வந்து முடியும் வடிவம். பூஜ்யத்தில் தொடங்கி, தொடங்கிய புள்ளியிலேயே வந்து முடிந்தால் 360 பாகைகள் கொண்டு அது முழுமை அடைகிறது என்று அறிகிறோம். இதன்மூலம் பூஜ்யமும் பூரணமும் ஒன்றே என்று அறிகிறோம். ஆதியும் அந்தமும், தொடக்கமும் முடிவும் ஒரே இடமாக இருந்தால் அதுவே முழுமையானது. சுழி என்பது இன்மை என்றாலும் முழுமை என்றாலும் சரியே. தற்போது பூஜ்யம் (0) என்பது இன்மையை குறிக்கவும் முடிவிலி (infinity) ∞ என்பது இரண்டு பூஜ்யங்களாலும் குறிக்கப்படுகிறது.

உயிரின் வடிவம்

மனித உயிரின் முதல் கரு முட்டை (zygote) என்பதின் வடிவம் ஒரு வட்டமாகவும் அதன் நடுவே infinity போன்ற இரண்டு வட்டங்கள் சேர்ந்தும் இருக்கிறது.

வெறுமையிலிருந்து முழுமைக்குபூஜ்யத்திலிருந்து பூரணத்திற்கு

The birth of quantum physics in the early 1900s made it clear that light is made of tiny, indivisible units, or quanta, of energy, which we call photons. இருள் என்பது வெறுமை (absence – No Thing – nothing), ஒன்றும் இல்லாத ஒரு நிலை. ஒளியின் இன்மையே இருள். அணுவுக்குள் அணுவாக பிரிக்க முடியாத மூல முதற்பொருளாக இருக்கும் ஒன்றே உலகில் எல்லாமாயும் (existence – Every Thing – everything) நிறைந்து முழுமையாக பூரணமாக இருக்கிறது என்கிறது அறிவியல்.

PRAYER From (ii) Thirumarai 8, Thiruvachakam (05), Thirusatakam, Verse 15:Tamil:

“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதென்(று) அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே” 8-5-15

வானாகி (space) மண்ணாகி (earth), வளியாகி (invisible) ஒளியாகி (visible), ஊனாகி (body), உயிராகி(life), உண்மையுமாய்(existence) இன்மையுமாய்க்(absence), கோனாகி (ego-king)  யான்எனதென்(று) (me and mine) அவரவரைக் (every individual) கூத்தாட்டு
வானாகி நின்றாயை(activates everyone) என்சொல்லி வாழ்த்துவனே(how to praise the creation). ஆன்மிகமும் இதே கருத்தை நிறுவுகிறது.

பிள்ளை யார்?

இந்த பிரம்மாண்டம் அல்லது முடிவிலி என்று சொல்லப்படுகிற பரா சக்தியின் (universal energy) பிள்ளையாக உருவான உயிர் (life energy) என்பதே அனைத்திற்கும் மூல காரணமாக (root cause) மூலாதாரமாக இருக்கிறது. சுழியும் முடிவிலியும் ஒன்றோடொன்று இணைந்து இருக்கிறது. எது உலகமாக வெளியில் இருக்கிறதோ அதுவே பிள்ளையாக உயிராக உள்ளேயும் இருக்கிறது. உலகில் உள்ள அனைத்து உயிர்களுமே இந்த பூமித்தாயின் பிள்ளைகள் தான்.

உள்ளிருக்கும் உயிரும் வெளியில் இருக்கும் பராசக்தியும் இணையும் போது எந்த செயலும் செவ்வனே முழுமை அடையும்.

இதை நினைவுறுத்தும் பிள்ளையார் சுழி போட்டு செயல்படும் போது எல்லாம் என்னால் தான் என்ற அஹங்காரம் அழியும், எல்லாம் என்னுடையது என்ற மம காரம் அழியும், எல்லாமாயும் இருக்கும் பெரும் சக்தியே அனைத்தையும் நிகழ்த்துகிறது என்கிற உணர்வு மேலோங்கும். நான் எனது என்ற எண்ணங்கள் ஒரு செயலை செய்ய விடாமல் தடுக்கும். எல்லாம் இறையின் செயல், என்னால் ஆவது ஒன்றும் இல்லை என்ற எண்ணம் தடைகளை நீக்கி நல்ல வழியை காட்டும்.

பராசக்தியால் முடியாத செயல் எதுவும் இல்லை ஆகையால் பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கினால் அது வெற்றிகரமாக முடிவடையும்.

Leave a comment